பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை


பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தை
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே பாறையில் ஓய்வெடுத்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் குன்னூர் அருகே சிங்காரா எஸ்டேட் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியும் உள்ளது. தேயிலை தோட்டத்தில் உள்ள பாறையில் அவ்வப்போது சிறுத்தை வந்து ஓய்வெடுத்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் வளர்ப்பு நாய்களை சிறுத்தை அடித்து கொன்று கொண்டு செல்கின்றன. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story