குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை


குடியிருப்பில் உலா வந்த சிறுத்தை
x
தினத்தந்தி 1 Aug 2023 3:00 AM IST (Updated: 1 Aug 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் குடியிருப்பில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகின்றன. சில நேரங்களில் வளர்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி செல்கின்றன. இந்தநிலையில் இரவில் குன்னூர் நகரில் உள்ள மவுண்ட் பிளசண்ட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்தது. இந்த காட்சி அப்பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வர அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, குடியிருப்புக்குள் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story