திண்டிவனம் அருகே உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்


திண்டிவனம்   அருகே        உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்தது;   டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sep 2023 6:45 PM GMT (Updated: 20 Sep 2023 6:45 PM GMT)

திண்டிவனம் அருகே உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

விழுப்புரம்

மயிலம்,

தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. லாரியை அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவர் ஓட்டினார். அவருடன் கிளீனராக அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் உடன் வந்தார். அந்த லாரி நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த உப்பு மூட்டைகள் அனைத்தும் கீழே சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் டிரைவர் சதீஷ், பெரியசாமி பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மயிலம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story