நின்ற பஸ் மீது லாரி மோதியது; 11 பயணிகள் காயம்
சிவகங்கை அருகே நின்ற பஸ் மீது லாரி மோதியதில் 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
சிவகங்கை
மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சிவகங்கை அடுத்த சுந்தர நடப்பு பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று பஸ்சில் மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 11 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த மணக்கரை கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் (வயது80), மற்றும் வி.மலம்பட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா (65) ஆகிய 2 பேர் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story