கீரை மூட்டைகள் ஏற்றி வந்த லாரி 15 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்தது
வாணியம்பாடியில் கீரை மூட்டை ஏற்றிவந்த லாரி 15 உயர பாலத்தில் இருந்து விழுந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயத்துடன் உயிர்த்தப்பினர்.
வாணியம்பாடியில் கீரை மூட்டை ஏற்றிவந்த லாரி 15 உயர பாலத்தில் இருந்து விழுந்தது. இதில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயத்துடன் உயிர்த்தப்பினர்.
15 அடி உயரத்தில் இருந்து
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து கீரை மூட்டைகளை ஏற்றுக்கொண்டு சென்னை நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியில் அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வந்துள்ளது. வாணியம்பாடி பைபாஸ் சாலையில் லாரி சென்றபோது திடீரென முன் சக்கரம் உடைந்துள்ளது.
இதனால் நிலை தடுமாறி 15 அடி உயர பாலத்தின் மேல் இருந்து சர்வீஸ் சாலையில் விழுந்தது. இதில் லாரியில் இருந்த கீரை மூட்டைகள் ரோட்டில் சிதறின. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
3 பேர் காயம்
இந்த விபத்தில் லாரியை ஒட்டி வந்த சூளகிரியைச் சேர்ந்த டிரைவர் கணேசன் (வயது 30), கிளீனர் கோவிந்தராஜ் (26) ஆகியோர் படுகாயமடைந்தனர். அப்போது சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். காயமடைந்த 3 பேரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.