மின் ஒயர் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி தீ பிடித்து எரிந்தது
நெமிலி அருகே மின் ஒயர் உரசியதில் வைக்கோல் பாரம் ஏற்றிய லாரி தீ பிடித்து எரிந்தது.
ராணிப்பேட்டை
நெமிலியை அடுத்த கரியாகுடல் கிராமத்தில் அருணா என்பவரது விவசாய நிலத்தில் நெல் அறுவடை முடிந்து வைக்கோலை தர்மபுரி பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று விற்பனைக்கு வாங்கிய வைக்கோலை தன்னுடைய லாரியில் ஏற்றும்பணியில் முனியப்பன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியிலிருந்த வைக்கோல் மேலே சென்ற மின்ஒயர் மீது உரசியதால் வைக்கோல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவி லாரியும் எரிய தொடங்கியது.
உடனே அரக்கோணம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் லாரி, வைக்கோல் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story