பெருந்துறை கோட்டை மாரியம்மன்- முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழாநாளை நடக்கிறது


பெருந்துறை கோட்டை மாரியம்மன்- முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழாநாளை நடக்கிறது
x

பெருந்துறை கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை கோட்டை மாரியம்மன், முனியப்ப சாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.

மாரியம்மன்- முனியப்ப சாமி கோவில்

பெருந்துறையில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள், கிராம சாந்தி ஆகியவை நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கியது. இதையடுத்து மாரியம்மன் மற்றும் முனியப்பன் சாமி கோவில்களுக்கு வாஸ்து சாந்தி நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா

பின்னர் மாலை, முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை, 2-ம் கால யாக பூஜை மற்றும் 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. பின்னர் கோவில் விமானங்களின் மீது கோபுர கலசங்களை வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 4-ம் கால பூஜை முடிந்ததும், 7.30 மணிக்கு கோவில் கலசங்களின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கும்பாபிஷேக விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story