பருவதமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
பருவதமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கலசபாக்கம்
பருவதமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென் மகாதேவமங்கலம், கடலாடி கிராமத்திற்கு இடையே பருவதமலையில் 4 ஆயிரத்து 568 உயரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று மல்லிகார்ஜுனேஸ்வரரை தரிசித்து வருகின்றனர். பவுர்ணமி,வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தென்மகாதேவமங்கலம், அருணகிரிமங்கலம், கோவில்மாதிமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை தீபம் ஏற்றுவதற்காக கொப்பரைக்கு தீபாராதனை செய்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு மாலை ஆறு மணிக்கு கொப்பரையில் நெய் ஊற்றி மகா தீபம் ஏற்ற்பட்டது. இதனையொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பருவதமலை அடிவார பகுதியை சேர்ந்தவர்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் மலை மீது ஏற்றிய தீபத்தை பார்த்து வணங்கி விட்டு தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.