சாலையை கடக்க முயன்றவர் வேன் மோதி சாவு


சாலையை கடக்க முயன்றவர் வேன் மோதி சாவு
x

சாலையை கடக்க முயன்ற போது வேன் மோதி ஒருவர் உயிரிழந்தார்

மதுரை

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை(வயது 51). இவர் நேற்று முன்தினம் செங்குளம் பகுதி நான்கு வழிச்சாலையில் கடக்க முயன்றார். அப்போது விருதுநகரில் இருந்து ஈரோடு நோக்கி கோழி ஏற்றி சென்ற வேன் எதிர்பாராத விதமாக முத்துக்காளை மீது மோதியது. இதில் முத்துக்காளை பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார்.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த வேலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story