கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது


கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 6:02 PM IST (Updated: 21 Jun 2023 6:04 PM IST)
t-max-icont-min-icon

தூசி அருகே கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

தூசி

தூசி அருகே கர்ப்பிணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேர் தலைமறைவாகி விட்டனர்.

தூசி அருகே உள்ள மாங்கால் காலனியைச் சேர்ந்த எல்லப்பன் மகள் திவ்யா. கங்காதரன் மகன் பிரவீன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்களது திருமணம் நடந்த பிறகு இரு குடும்பத்தினரிடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கங்காதரன் மகள் பிரீத்தா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் எல்லப்பன் மகன்கள் 4 பேர் சேர்ந்து பிரித்தாவை திட்டி இரும்புராடால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது குறித்து தூசி போலீசில் பிரீத்தா புகார் அளித்தார். அது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப் பதிவு செய்து பிரபு என்பவரை கைது செய்து தலைமறைவான உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.


Next Story