பெட்ரோல் பங்கில் பெட்ரோல் திருடி சென்ற ஒருவர் கைது


பெட்ரோல் பங்கில் பெட்ரோல் திருடி சென்ற ஒருவர் கைது
x

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் திருடி சென்ற ஒருவர் கைது

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்தவர் நாகு. இவரது மகன் செல்வகுமார் (வயது27). இவர் இவரது நண்பர்கள் மகாராஜா மற்றும் மனோஜ் கண்ணன் ஆகியோருடன் திருப்பூரில் இருந்து கோவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் பெட்ரோலை திருடிக் கொண்டு கோவில்பாளையம் நோக்கி தப்பிச்சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதாகியதால் மோட்டார் சைக்கிளை உருட்டிக்கொண்டு சென்றுள்ளனர். இதனைப்பார்த்த பங்க் ஊழியர்கள் அந்த நபர்களை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.

இதில் பின்னால் அமர்ந்து வந்த செல்வகுமாரின் நண்பர்கள் மகாராஜா மற்றும் மனோஜ் கண்ணன் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் வாட்ச்மேன் குணசேகரன் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story