நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
அயோத்தியாப்பட்டணம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
அயோத்தியாப்பட்டணம்:-
காரிப்பட்டி அருகே உள்ள அருநூற்று மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அருநூற்று மலைக்கு சென்ற போலீசார், நடுவட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த வடிவேலு (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். மேலும் 200 லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் அருநூற்று மலை சாலங்காடு பகுதியில் காரிப்பட்டி போலீசார் சோதனை செய்தபோது, நடேசன் (30) என்பவரின் கொட்டகையில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் ெசய்ததுடன், நடேசனையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story