நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2022 1:15 AM IST (Updated: 24 Oct 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமத்தில் கெங்கவல்லி வனச்சரக வனவர் செல்வன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா மண்ணூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (வயது 40) என்பவர் உரிய அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்த வனத்துறையினர் ஆத்தூர் ரூரல் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் பெரியசாமியை கைது செய்த போலீசார்.அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


Next Story