நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
தலைவாசல்:-
வெள்ளையூர் கிராமத்தில் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வீரகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மைக்கேல் ஆண்டனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சோதனை செய்தனர். அப்போது உமா மகேஸ்வரன் (வயது 38) என்பவர் வீட்டில் 2 நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உமா மகேஸ்வரனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire