ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் வைத்திருந்தவர் கைது


ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் வைத்திருந்தவர் கைது
x

குளித்தலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

குடோனில் சோதனை

கரூர் மாவட்டம் குளித்தலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன் (வயது 42). இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் இவரது கடையில் செம்மரக் கட்டைகள் இருப்பதாக குளித்தலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவத்தன்று அங்கு சென்ற போலீசார் அவரது குடோனில் சோதனை செய்தபோது அங்கு செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது செம்மரக்கட்டைகள் வாங்கியதற்கான உரிய ஆவணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் செம்மரக்கட்டைகளையும் அதை வைத்திருந்த செல்லபாண்டியையும் கரூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக கரூர் வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து செல்லபாண்டியை கைது செய்தனர்.

மேலும் அவர் கடையிலிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 21 செம்மர மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். வனத்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மணப்பாறை சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story