மதுபோதையில் தூங்கியவர் 'திடீர்' சாவு


மதுபோதையில் தூங்கியவர் திடீர் சாவு
x

கருங்கல் அருகே மதுபோதையில் தூங்கியவர் ‘திடீர்’ சாவு

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள மங்கலகுன்று இந்திராநகர் காலனியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது49). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அதிக மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து மனைவியும் மகளும் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கச் சென்றனர். விஜயகுமார் மற்றொரு அறையில் சென்று தூங்கினார். நேற்று காலையில் பார்த்த போது விஜயகுமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் ெகாடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story