ஓடும் பஸ்சில் என்ஜினீயரிடம் பணம், செல்போனை திருடியவர் கைது


ஓடும் பஸ்சில் என்ஜினீயரிடம் பணம், செல்போனை திருடியவர் கைது
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் என்ஜினீயரிடம் பணம், செல்போனை திருடியவர் கைது

கன்னியாகுமரி

களியக்காவிளை:

திண்டுக்கல் மாவட்டம் அழகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 30), என்ஜினீயர். இவர் திருவனந்தபுரத்திற்கு அரசு பஸ்சில் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். குழித்துறை அருகே திருத்துவபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது, அவருடைய பையை ஒரு வாலிபர் திருடிச் சென்றுள்ளார். அந்த பையில் கேமரா, செல்போன், ரூ.4ஆயிரத்து 600 ஆகியவை இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபிநாத் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த விஜின் (37) என்பவரை பையை திருடிச் சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் விஜினை கைது செய்து அவரிடம் இருந்து பையை மீட்டனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.


Next Story