வெள்ளாற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல்


வெள்ளாற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல்
x

வெள்ளாற்றில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட லெப்பைக்குடிகாடு வெள்ளாவற்றின் கரையோரம் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, அரங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் செந்தில்குமார்(வயது 45) என்பது தெரிந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story