கால்வாயில் கிடந்த ஆண் பிணம்


கால்வாயில் கிடந்த ஆண் பிணம்
x

அம்பையில் நதியுண்ணி கால்வாயில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள நதியுண்ணி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பிணத்தை மீட்டனர். அவர் கருப்பு நிறத்தில் சட்டையும், சிவப்பு நிறத்தில் வேட்டியும் அணிந்துள்ளார். அவர் யார், எந்த ஊர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story