மகளுடன் தம்பதி மாயம்


மகளுடன் தம்பதி மாயம்
x

தி்ண்டிவனம் அருகே மகளுடன் தம்பதி மாயமானார்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விட்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75). இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் ஞானபிரகாஷ் (38). இவர் தனது மனைவி சவுந்தரவள்ளி (35), மகள் சரண்யா (16) ஆகியோருடன் சென்னை குரோம்பேட்டையில் தங்கி கூலி வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஞானபிரகாஷ் தனது மனைவி, மகளுடன் விட்லாபுரத்துக்கு வந்து தனது தாயை பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் கடந்த 3-ந்தேதி சென்னைக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அவர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து செல்வராஜ் செல்போன் மூலம் ஞானபிரகாசை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு ஞானபிரகாஷ் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு செல்வராஜ் கூறியுள்ளார். அதன்படி உறவினர், ஞானபிரகாஷ் வீட்டுக்கு சென்றுபார்த்துள்ளார். ஆனால் அங்கு வீடுபூட்டிக்கிடந்துள்ளது.

போலீசார் விசாரணை

இது குறித்து செல்வராஜ் ரோசணை போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகன் ஞானபிரகாஷ், மருமகள் சவுந்தரவள்ளி, பேத்தி சரண்யா ஆகியோரை காணவில்லை. எனவே அவர்களை கண்டுபிடித்து தரவேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story