அழுகிய நிலையில் இறந்து கிடந்த மேஸ்திரி
திமிரி அருகே அழுகிய நிலையில் மேஸ்திரி இறந்து கிடந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கணியனூர் கிராமத்தில் கீழ்பாடி செல்லும் சாலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவர் கணினூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (வயது 45) என்பதும், மேஸிதிரி வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 8-ந் தேதி வேலைக்கு சென்ற இவர் மாலையில் கீழ்பாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தின் மேல் அமர்ந்து மது குடித்துவிட்டு தவறி கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியாகி உள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக அவரை உறவினர்கள் தேடி வந்த நிலையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.