பழனி வையாபுரிக்குளத்தை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' திட்டம்


பழனி வையாபுரிக்குளத்தை மேம்படுத்த மாஸ்டர் பிளான் திட்டம்
x

பழனி வையாபுரி குளத்தை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திண்டுக்கல்

பழனி நகராட்சி சார்பில், வையாபுரிக்குளத்தின் கரைப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொக்லைன் எந்திரத்தை இயக்கி தூய்மை படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து குளத்துக்கரையில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் தமிழ்மணி, இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி முருகன் கோவிலை மேம்படுத்த 'மாஸ்டர் பிளான்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் வையாபுரிக்குளத்தையும் இணைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தவுடன் பழனி அரசு மருத்துவமனையில் ரூ.70 கோடியில் திட்ட பணிகள் தொடங்கிவிடும். இதேபோல் பழனியில், சித்த மருத்துவ கல்லூரி கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்னதாகவே மருத்துவமனை செயல்படும் என்றார்.


Next Story