காளையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
காளையார்கோவில்
காளையார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழுத் தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்யன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் நாகவல்லி பாண்டிக்கண்ணன் கூறும் போது, மறவமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கவுன்சிலர் கந்தசாமி பேசும் போது, பெரும்பாலான பகுதிகளில் நெல் விளைச்சல் இல்லை. எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் மகேஸ்வரன் பேசும் போது, சொர்ணவள்ளி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.