த.மு.மு.க நிர்வாகிகள் கூட்டம்
உடன்குடியில் த.மு.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
உடன்குடி:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் உடன்குடி அலுவலகத்தில் நடைபெற்றது. த.மு.மு.க மற்றும் ம.ம.க. மாவட்ட தலைவர் ஆசாத் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஹீமீத், மாவட்ட செயலர் ஹஸ்மத் ஹூசைன், ம.ம.க. செயலர் ஹசன், மாவட்ட பொருளாளர் சர்தார், மாவட்ட துணைத்தலைவர் நைனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருகிற 6-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது, உடன்குடி அரசு மருத்துவமனை மற்றும் குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பழுதைடந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், காலியாக உள்ள ஆஸ்பத்திரி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை செயலர்கள் ரபீக், ஜபருல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலர் நூர், மாவட்ட இளைஞரணி செயலர் பரக்கத்துல்லா, ஊடகப்பிரிவு செயலர் முகம்மது ஆபித், ஐதுரூஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.