எஸ்.புதூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டம்
எஸ்.புதூரில் ஊராட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் வட்டார ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு கூட்டம் எஸ்.புதூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் அடைக்கலசாமி தலைமை தாங்கினார். செயலாளர் அருண்பிரசாத், துணை தலைவர் ஜோதி பித்திரை செல்வம், துணை செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற கூடிய பணிகளுக்கு எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு கூடுதல் நிதி வழங்கிடவும், நிலுவையில் உள்ள பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகளை உடனடியாக வழங்கிடவும், ஊராட்சிகளில் காலியாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர் காலி இடங்களை உடனடியாக நிரப்பவும், ஊராட்சிகளில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.