கள்ளக்குறிச்சியில்மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்
கள்ளக்குறிச்சியில் மனநலம் பாதித்து குணமடைந்தவர், குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூரில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் புனித அன்னாள் மன நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற பழனிச்சாமி (வயது 43) என்பவர் , மன நலம் பாதிக்கப்பட்டு 11 ஆண்டுகளாக தங்கி, சிகிச்சை பெற்று வந்தார்.
அதில் தற்போது குணமடைந்த பழனிச்சாமியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவருடைய தங்கை செல்வியிடம் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஒப்படைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி இருந்தார்.
Related Tags :
Next Story