அரசு பஸ் மீது, மினி பஸ் மோதி விபத்து


அரசு பஸ் மீது, மினி பஸ் மோதி விபத்து
x

கணியம்பாடி அருகே அரசு பஸ் மீது, மினி பஸ் மோதி 10 பேர் காயமடைந்தனர்.

வேலூர்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் மினி பஸ்சில் சபரிமலை சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை வேலூரை அடுத்த கணியம்பாடி கணவாயில் உள்ள வேளாண்மை அலுவலகம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மினிபஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினிபஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் இருந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் மற்றும் அரசு பஸ்சில் இருந்த 2 பயணிகள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் வேலூர்- திருவண்ணாமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story