அரசு பஸ் மீது மினி வேன் மோதி விபத்து 500 லிட்டர் பால் சாலையில் ஓடியது


அரசு பஸ் மீது மினி வேன் மோதி விபத்து 500 லிட்டர் பால் சாலையில் ஓடியது
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் மீது மினி வேன் மோதி விபத்தில் 500 லிட்டர் பால் சாலையில் ஓடியது

திருவண்ணாமலை

செங்கம்

அரசு பஸ் மீது மினி வேன் மோதி விபத்தில் 500 லிட்டர் பால் சாலையில் ஓடியது

செங்கத்தை அடுத்த அரட்டவாடி, பி.எல்.தண்டா, வேடங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பால் கேன்களில் பசும்பால் சேகரித்து மினி வேனில் செங்கம் அருகே உள்ள செ.சொர்பனந்தல் பகுதியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று கல்தாம்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் ராஜேஷ் என்ற 2 பேர் மினி வேனில் பால் கேன்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர்.செங்கம் திருவள்ளூர் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது பால் ஏற்றி வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது.

நல்ல வேளையாக பஸ் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு அருகில் இருந்த வயல்வெளியில் பஸ்சை லாவகமாக இறக்கியதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

எனினும் மினிவேனிலிருந்த 500 லிட்டர் பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணானது.

இந்த விபத்தில் காயம் அடைந்த மினிவேன் டிரைவர் பிரசாந்த் அவருடன் வந்த ராஜேஷ் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story