ரூ.1½ கோடி செலவில் நவீன தகன மேடை


ரூ.1½ கோடி செலவில் நவீன தகன மேடை
x

ரூ.1½ கோடி செலவில் நவீன தகன மேடை

சிவகங்கை

மானாமதுரை

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானாமதுரை நகராட்சி பகுதியான அரசகுலி மயானம் அருகே நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட உள்ளது. ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் அமைக்கப்படும் இந்த தகன மேடைக்கான பூமி பூஜை நேற்று மானாமதுரை நகராட்சி நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பூமி பூஜை விழாவில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகர மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் மாரிக்கண்ணன், சண்முகப்பிரியா, புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story