தண்ணீர் தொட்டியில் விழுந்த கடமான் உயிருடன் மீட்பு

வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த கடமான் உயிருடன் மீட்கப்பட்டது.
கோயம்புத்தூர்
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் 5-ம் ெநம்பர் தேயிலை தோட்ட பகுதியில் மூடப்பட்ட நிலையில் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டிக்குள் வனப்பகுதியில் இருந்து ஓடி வந்த கடமான் ஒன்று மூடியை உடைத்து கொண்டு தவறி விழுந்தது.
இதுகுறித்து எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் விரைந்து வந்து, தொழிலாளர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டு சுவரை உடைத்தனர். அந்த வழியாக கடமான் வெளியே வந்து, வனப்பகுதியை நோக்கி ஓட்டம் பிடித்தது. தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த கடமானை உயிருடன் மீட்ட வனத்துறையினருக்கு, தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story