மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தை சேர்ந்தவர் பீர்முகமது. இவருடைய மகன் ஷேக்முகமது (வயது 20). இவர் நேற்று மதியம் திசையன்விளை அற்புத விநாயகர் கோவில் சந்திப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story