தேவகோட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-1 மாணவர் பலி


தேவகோட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-1 மாணவர் பலி
x
தினத்தந்தி 20 Sept 2023 7:00 PM (Updated: 20 Sept 2023 7:00 PM)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பிளஸ்-1 மாணவர் உயிரிழந்தார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை பனிப்புலான்வயல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் சந்துரு(வயது 17). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் அருகே உள்ள வரிக்குடி கிராமத்திற்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சந்துரு, அவருடன் படிக்கும் நாரணமங்கலம் கருப்பையா மகன் அஜித் குமார்(17), வரிக்குடி அருள்சாமி மகன் கிலாடிஸ்(16), மொன்னானி சரவணன் மகன் அக்்ஷத்(16) ஆகியோர் சென்றனர். தேவகோட்டை அடுத்த சித்தனூர் அருகே செல்லும்போது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த சந்துரு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story