தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது; வாலிபர் சாவு
திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
திருமங்கலம்,
ஈரோடு மாவட்டம் கந்தசாமிபாளையத்தைச் சேர்ந்த பாபு மகன் சிவசக்திவேல் (வயது 22). இவரும், நண்பர் பேரையூர் அருகே உள்ள வன்னிவேலம்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமாரும் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே திரளி கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். டி.புதுப்பட்டி பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சிவசக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரஞ்சித்குமார் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.