பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது; வியாபாரி சாவு
பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்
மதுரை
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). பால் வியாபாரி. இவர் நேற்று திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அதன்பிறகு அவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் கச்சிராயிருப்பு பிரிவு அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story