கரூரில் ஓடும் காரில் தீ விபத்து


கரூரில் ஓடும் காரில் தீ விபத்து
x

கரூரில் ஓடும் காரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளி துணை முதல்வர் உயிர் தப்பினார்.

கரூர்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இவா் ேநற்று இரவு தனது காரில் அவருக்கு ெசாந்தமான நாய் ஒன்றை தாந்தோணிமலையில் விடுவதற்காக வந்து கொண்டிருந்தார்.கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது, காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி தனது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு நாயுடன் கீழே இறங்கி உயிர் தப்பினார்.சிறிது நேரத்தில் கார் மளமளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இருப்பினும் கார் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story