பல கோடி ரூபாய் மோசடி:நிதி நிறுவன இயக்குனர் கைது


பல கோடி ரூபாய் மோசடி:நிதி நிறுவன இயக்குனர் கைது
x

பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

மதுரை


மதுரையை தலைமையிடமாகக் கொண்டு நியோ-மேக்ஸ் என்ற நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரட்டிப்பு தொகை வழங்குவதாகவும், மேலும் கட்டிய பணத்திற்கு நிலம் தருவதாகவும் கூறி வாடிக்கையாளர்களை கவர்ந்தனர். இதன் மூலம் சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் எழுந்தன. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நெல்லை நிறுவனம் இயக்குனர்கள் தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை அச்சம்பத்து கபில், தூத்துக்குடி இசக்கி முத்து, சகாயராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரே நேரத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள நியோ-மேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களின் ஒருவரான மதுரை காளவாசல் பை-பாஸ்ரோடு பகுதியை சேர்ந்த பத்மநாபன்(வயது 60) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story