ஓட்டலில் ரூ.5 ஆயிரம் திருடிய மர்மநபர்


ஓட்டலில் ரூ.5 ஆயிரம் திருடிய மர்மநபர்
x

ஓட்டலில் ரூ.5 ஆயிரம் திருடிய மர்மநபர்

திருவாரூர்

மன்னார்குடியில் ஓட்டலில் ரூ. 5 ஆயிரம் திருடிய மர்மநபரின் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.5 ஆயிரம் திருட்டு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி ரோட்டில் அருண் என்பவருக்கு சொந்தமான சிறு தானிய ஓட்டல் உள்ளது. நேற்று அதிகாலை உணவு தயாரிப்பதற்காக ஓட்டலை திறந்துவைத்துவிட்டு பின்புறம் உணவு தயாரிக்கும் வேலையில் அருண் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓட்டலில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து யாரும் வருகிறார்களா? என நோட்டமிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த பாத்திரம் ஒன்றில் மூடி வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார்.

சிறிது நேரம் சென்று கல்லாப்பெட்டி அருகே இருந்த பாத்திரம் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை சோதனை செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் கடைக்குள் வந்து பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் அருண் புகார் அளித்தார். அதன்பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டலுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story