இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை


இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை
x
தினத்தந்தி 16 Jun 2023 6:45 PM GMT (Updated: 16 Jun 2023 6:45 PM GMT)

இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்

சிவகங்கை

எஸ்.புதூர்

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி சத்திரம். பல முக்கிய ஊர்களுக்கு இணைப்பாக இது உள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்படும். இந்த நிலையில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. அவற்றை போக்கும் வகையில் சாலையோரம் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். உயர்கோபுர மின்விளக்கு எரியாததால் தேசிய நெடுஞ்சாலையே இருளில் மூழ்கி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story