அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் புதிய கட்டிடம்


அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் புதிய கட்டிடம்
x

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டும் புதிய கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த மருத்துவமனை கட்டிடங்கள் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கட்டிட பணிகளை துரிதமாக செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பிரசவ வார்டு, பொதுவார்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து, மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள் டேவிட் விமல்குமார், பார்த்திபன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.


Next Story