அரசு பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்


அரசு பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம்
x

அரசு பள்ளிக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கலில் உள்ள எஸ்.ஆர்.என். அரசு தொடக்கப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு போதிய வகுப்பறைகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் இதுகுறித்து கல்வித்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றதால் தற்போது ரூ.1 கோடியே 1 லட்சம் செலவில் 6 வகுப்பறைகள் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து நேற்று காலை புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. சிவகாசி மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பொன்சக்திவேல் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் திருப்பதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் கலந்து கொண்டு புதிய கட்டிடத்துக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இதில் சிவகாசி மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீநிகா, செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story