கோவிலில் புதிய சிலை வைக்க முயன்றதால் பரபரப்பு


கோவிலில் புதிய சிலை  வைக்க முயன்றதால் பரபரப்பு
x

கோவிலில் புதிய சிலை வைக்க முயன்றதால் பரபரப்பு

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே குட்டம் ஆனந்தவல்லி அம்மன் கோவிலில், அம்மன் அமர்ந்து நிலையில் இருந்த சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டு, அருகில் உள்ள கிணற்றில் போடப்பட்டது. தொடர்ந்து அம்மன் நின்ற நிலையில் இருந்த சிலை கோவிலில் நிறுவப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவிலில் நின்ற நிலையில் இருந்த அம்மன் சிலையை மர்மநபர்கள் உடைத்ததால், கோவில் கிணற்றில் போடப்பட்ட பழைய அம்மன் சிலையை மீண்டும் எடுத்து வந்து கோவிலில் நிறுவி வழிபட்டனர்.

இதற்கு கோவில் வரிதாரர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் காரில் வந்த சிலர் கோவிலில் மீண்டும் புதிய அம்மன் சிலையை வைக்க முயன்றனர். இதனை அறிந்த உவரி போலீசார், அந்த சிலையை காருடன் பறிமுதல் செய்து, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த சிலையை தாசில்தார் செல்வகுமாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story