புதிய தார்சாலை அமைக்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு


புதிய தார்சாலை அமைக்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு
x

பாளையங்கோட்டையில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா, காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணி தலைமையில் மேயரிடம் மனு கொடுத்தனர்.

அதில், "பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளைநகர் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. எனவே அங்கு புதிய தார் சாலை அமைக்க வேண்டும். மேலும் பேவர் பிளாக் கல் பதித்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

27-வது வார்டு வ.உ.சி. தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் 3 கேமராக்கள் சேதம் அடைந்துள்ளது அதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

நயினார்குளம் நீர்ப்பாசன சங்க உதவி செயலாளர் முருகன் கொடுத்த மனுவில், "நெல்லை ஆனந்தபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி பராமரிக்கப்படாமல் பழுதடைந்துள்ளது. அதை சுற்றிலும் முள்செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. எனவே குடிநீர் தொட்டியை பழுது நீக்கி பராமரிக்க வேண்டும். ஆனந்தபுரத்தில் சமுதாய நலக்கூடம் அஸ்திவாரம் போட்ட நிலையில் உள்ளது. எனவே கட்டிடம் கட்டும் பணியையும் உடனடியாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகர் 2-வது குறுக்குத்துறை பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும். அழகநேரி சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் மின் கம்பம் மற்றும் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன.

1 More update

Next Story