ரூ.1 கோடியே 19 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம்


ரூ.1 கோடியே 19 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம்
x

ரூ.1 கோடியே 19 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த எலத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் தொடக்கபள்ளி இயங்கிவருகிறது. இப்பள்ளியில் 62 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் 2019-2020-ம் ஆண்டு தாட்கோ நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 19 லட்சத்து 45 ஆயிரம் இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது.

இதனை நேற்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாணவ மாணவிகளுக்கு இப்பள்ளியின் வெளியே கழிப்பறை நீர்வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்பள்ளியில் அதிக மாணவர்களை சேர்க்கவேண்டுமென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்.எல்.ஏ. முனிரத்னம், நெமிலி ஒன்றியக்குழுத்தலைவர் வடிவேலு, சப்- கலெக்டர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தீனதயாளன், எலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story