வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும்


வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும்
x

வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினாா்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

வேட்டங்குடியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும் என்று கொள்ளிடம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கூறினாா்.

ஒன்றியக்குழு கூட்டம்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் தியாகராஜன், ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் கூறியதாவது:-அரசு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலேயே கொள்ளிடம் வட்டாரம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதனால் கடந்த சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கட்டிடம்

தொடுவாய் கடற்கரையில் மின்விளக்குகள் அமைக்கப்படும். வேட்டங்குடியில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டித்தரப்படும். காட்டூர், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.ஒவ்வொரு ஊராட்சியிலும் பயனாளிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் வீடு கட்டும் பயனாளிகள் பெயர் பட்டியல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் கண்ணில் படும்படி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுன் பஸ்

வடரங்கத்திலிருந்து மாதிரவேளூர் வரை ஒரு நாளில் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளில் மட்டும் சென்று வரும் அரசு டவுன் பஸ் ஒரு நாளில் 5 முறை வீதம் சென்று வர போக்குவரத்து கழக அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி, ஒன்றிய பொறியாளர்கள் பலராமன், பூர்ணசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story