வேளுக்குடி இரட்டை குளத்தில் புதிய படித்துறை கட்ட வேண்டும்


வேளுக்குடி இரட்டை குளத்தில் புதிய படித்துறை கட்ட வேண்டும்
x

வேளுக்குடி இரட்டை குளத்தில் புதிய படித்துறை கட்ட வேண்டும்

திருவாரூர்

வேளுக்குடி இரட்ைட குளத்தில் புதிய படித்துறை கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இரட்டை குளம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் கோவில் எதிரே உள்ளது இரட்டை குளம். இந்த குளத்தினை வேளுக்குடி, சித்தனங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், வேளுக்குடி அபிமுக்தீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கும், ஆடைகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தின் நான்கு கரைகளும் பராமரிக்கப்பட்டு வெள்ளையாற்றில் இருந்து வரும் தண்ணீரை குளத்தில் தேக்கி வைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

படித்துறை சேதம்

இந்த குளத்தின் கரையோரத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட படித்துறை படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளது. சேதமடைந்த படித்துறையை சூழ்ந்து அடர்ந்த செடிகள் காணப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆண்டுகளாக படித்துறையை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் குளத்தின் கரையோரங்களில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன.

எனவே குளத்தின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சேதமடைந்த படித்துறையை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக படித்துறை கட்ட வேண்டும் என்று அந்த பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story