கோபுரத்தில் ரூ.7½ லட்சத்தில் புதிய இடி தாங்கி


கோபுரத்தில் ரூ.7½ லட்சத்தில் புதிய இடி தாங்கி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயசாமி, பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில்களின் கோபுரத்தில் ரூ.7½ லட்சத்தில் புதிதாக இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

சுசீந்திரம்:

குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயசாமி, பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில்களின் கோபுரத்தில் ரூ.7½ லட்சத்தில் புதிதாக இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தில் புதிய இடிதாங்கிகள்

இடி மற்றும் மின்னலில் இருந்து கோவில் கோபுர கலசங்களை பாதுகாக்கும் விதத்தில் கோபுரங்களில் இடிதாங்கி வைக்கப்படுவது வழக்கம்.

அதன்படி குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் என 2 கோவில்களில் இடிதாங்கிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த இடிதாங்கி சிதிலமடைந்ததால் அதற்கு பதிலாக புதிய இடிதாங்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

சுசீந்திரம், பத்மநாபபுரம் கோவில்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் கோபுரம் 133 அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்தில் 7 நிலைகளும் கோபுரத்தின் மேல் உச்சியில் 7 தாமிர கலசமும் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில் கோபுரம் 64½ அடி உயரம் கொண்டது. இந்த கோபுரத்தில் 5 நிலைகளும், கோபுரத்தின் மேல் உச்சியில் 5 தாமிர கலசங்களும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 கோவில்களிலும் உள்ள கோபுர கலசங்களை பாதுகாக்கும் விதத்தில் இடிதாங்கி வைக்கப்பட்டு கலசங்கள் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் இடிதாங்கி சிதிலமடைந்தது.

இதனை தொடர்ந்து குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.7½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2 கோவில் கோபுரத்திலும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய இடிதாங்கிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடிதாங்கிகள் சுமார் 10 ஆண்டு காலம் பாதுகாப்பாக இருக்கும் என திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story