கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் - தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு மனு
கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
தென்னக ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா, தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது:- கன்னியாகுமரியில் இருந்து புனே வரை செல்லும் ரெயிலை மும்பை வரை இயக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரெயில் இயக்க வேண்டும். கொடுமுடி ரெயில் நிலையத்தில் 4 ரெயில்கள் நின்று செல்லவும், ஈரோட்டில் கூடுதலாக ஒரு நடைமேடையும் அமைக்க வேண்டும். கோவை -சேலம் பயணிகள் ரெயில் கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலை உடனடியாக இயக்க வேண்டும். மேலும் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்து இருந்தார்.
Related Tags :
Next Story