தமிழ்நாட்டில் புதிய காட்டுயிர் சரணாலயம்..!
ஓசூர் அருகே 686.406 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி ‘காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்’ என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
காவிரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தின் தொடர்ச்சியாக 'காவிரி தெற்கு சரணாலயம் அமைய உள்ளது. ஓசூர் அருகே 686.406 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான காட்டுப்பகுதி 'காவேரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்' என்று அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஓசூர் கோட்டத்தின் அஞ்செட்டி, ஜவள கிரி, ஊரிகரம் சரகங்களை உள்ளடக்கி சரணாலயம் அமைகிறது.'காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம்' தமிழ்நாட்டின் 17-வது வனவிலங்கு சரணாலயமாகும்.
இந்த சரணாலயம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில்,
"காவிரி தெற்கு காட்டுயிர்க் காப்பகத்தைத் தமிழ்நாட்டின் 17வது காட்டுயிர்க் காப்பகமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TN Green Climate Company) செயல்படுத்தி வரும் பசுமை இயக்கங்களின் செயல்பாடுகளோடு இந்த முக்கிய முன்னெடுப்பு நமது மாநிலத்தின் வளமிகுந்த பல்லுயிர்ச் சூழலைக் காப்பதில் பெரும் உதவியாக இருக்கும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.