8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
சீர்காழி அருகே 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி காவேரி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயியான இவர் தனது வீட்டில் உள்ள கொல்லைப்புறத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கி இருந்த 8 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாபகரமாக பிடித்தார். இதனைத்தொடர்ந்து ராமச்சந்திரன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் பாண்டியன் விட்டுச்சென்றார்.
Related Tags :
Next Story