பணியின் போது தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு


பணியின் போது தொழிற்சாலை மேற்கூரையில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 26 Sept 2023 3:36 PM IST (Updated: 26 Sept 2023 4:30 PM IST)
t-max-icont-min-icon

சுங்குவார்சத்திரம் அருகே தொழிற்சாலையில் மேற்கூரை அமைக்கும் பணியின்போது தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.

காஞ்சிபுரம்

மேற்கூரை அமைக்கும் பணி

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயபிரசாத் (வயது 37). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜெயபிரசாத் நேற்று சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் தொழிற்சாலையில் மேற்கூரை அமைக்கும் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது மேற்கூரையில் இருந்து திடீரென ஜெயபிரசாத் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயபிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேற்கூரை அமைக்கும் பணியின்போது தொழிலாளி பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வேலை செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

1 More update

Next Story